Archive

Archive for the ‘News’ Category

தீபாவளி..!!

October15, 2009 Leave a comment

deepavali

deepavali

தீபங்களின் அணிவகுப்பு, எங்கும் ஒளிமயமாக இருக்கும் திருநாள்.!!
குழந்தைகளின் குதுகலத்திற்கு உகந்த நாள்..!!
” இருட்டில் ஒளியை விட அழகானது எதுவும் இல்லை”
அப்படி இருக்க அன்றைய இரவு பொழுது  வானம் முழுவதும் பல வண்ணங்களில்
பலவித சத்தத்துடன் வானத்தை அலங்கரிக்கும் பட்டாசுகள் கண்களுக்கு விருந்தளிக்கும்..!!

எப்படி எல்லா வகையிலும் மகிழ்ச்சி அளிக்கும் இந்த திருநாளை
அனைவரும் மகிழ்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடுவோம்…!!!

…..”இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்”…

தமிழருக்கு கிடைத்தது நோபல் பரிசு..!!

October8, 2009 Leave a comment

Ramakrishnan_625091a

ஸ்டாக்ஹோம் : நூறு கோடி இந்தியர்கள் பெருமைப்படும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த, சிதம்பரத்தில் பிறந்து தற்போது, அமெரிக்காவில் வாழும் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் உட்பட மூவருக்கு, இந்த ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு தரப்படுகிறது.

தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோநாத் ஆகியோர், இந்த ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம், சிதம்பரத்தில் கடந்த 1952ம் ஆண்டு பிறந்தவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இவர், கடந்த 1971ம் ஆண்டு, பரோடா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். கடந்த 1976ம் ஆண்டு, ஓகியோ பல்கலைக் கழகத்தில், இயற்பியல் துறையில், பிஎச்.டி., பட்டம் பெற்றார். இவர், இயற்பியல் வல்லுனராக தன் வாழ்க்கையை துவக்கினார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், உயிரியல் துறைக்கு மாறினார் ராமகிருஷ்ணன். அங்கு அவர், வகுப்புகள் நடத்தியதோடு, அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மவுரிசியோ மாண்டல் என்பவருடன் இணைந்து, ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.

ராமகிருஷ்ணன், கடந்த 1995ம் ஆண்டு, உட்டா பல்கலைக்கழகத்தில், உயிர் வேதியியல் துறை பேராசிரியராக சேர்ந்தார். அங்கு அவர், ஆர்.என்.ஏ.,( ரிபோ நியூக்ளிக் அமிலம் )வில் உள்ள புரோட்டீன்கள் குறித்து ஆய்வு செய்தார். “இ-கோலி’ யில் மிகச்சிறிய மூலக்கூறான “ரிபோசோமால்’ சப்யூனிட் குறித்த சிறப்பான ஆய்வு தான் இப்பரிசு பெறக் காரணமாக அமைந்தது. கடந்தாண்டு அவர், பிரிட்டன், கேம்பிரிட்ஜில் அமைந்துள்ள எம்.ஆர்.சி., மாலிக்குலார் பயாலஜி ஆய்வகத்தில், சேர்ந்தார். அங்கு அவர் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இவருக்கு, இந்தாண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. இவருடன், இதே ஆய்வு மேற்கொண்ட தாமஸ் ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோநாத் ஆகியோரும், இந்த நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரிபோசோமில் உள்ள ஆயிரக்கணக்கான அணுக்களை கண்டறிய, இம்மூன்று விஞ்ஞானிகளும், எக்ஸ்-ரே, கிரிஸ்டலோகிராபி முறையை பயன்படுத்தி உள்ளனர். வாழ்க்கைக்கு மிக முக்கியமான ரிபோசோம் குறித்து, இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், புதிய வகை ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தயாரிக்க வழிவகுக்கும்’ என,தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், டைனமைட் தொழிலதிபராக இருந்த, ஆல்பிரட் நோபல் எழுதிய உயிலின் படி, அறிவியல் மற்றும் அமைதிக்காக, கடந்த 1901ம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின், கடந்த 1969ம் ஆண்டு முதல், சுவீடன் மத்திய வங்கி, பொருளாதார துறைக்கான நோபல் பரிசு வழங்கத் துவங்கியது.

பள்ளியில் இருந்து விஞ்ஞான ஆர்வம்: விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தந்தையும், தாயும் விஞ்ஞானிகள், இவர் தன்னைப் பற்றிக் கூறும் போது, “விவசாயி மகன் எப்படி விவசாயியாக இருப்பாரோ அது போல, எனக்கு விஞ்ஞான ஆர்வம் உண்டு. பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆர்வம் காரணமாக, விஞ்ஞானத்தில் ஈர்க்கப்பட்டேன். பெற்றோர், டாக்டர் ஆக விரும்பினர். ஆனால் இயற்பியல், அதற்குப் பின் வேதியியல் ஆய்வில் ஈர்க்கப்பட்டேன்’ என்று கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி. ராமனுக்கு அடுத்தபடியாக விஞ்ஞான ஆய்வில் நோபல் பரிசு பெற்று சாதனை படைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன். சிதம்பரத்தைச் சேர்ந்த இவர், குஜராத்தில் உள்ள பரோடா பல்கலையில் இயற்பியல் படித்ததற்கு பின் வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்காக சென்று தற்போது, புகழேணியில் உயர்ந்து நிற்கிறார்.

Thanks:- Dinamalar

நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள்..!!

October7, 2009 Leave a comment
சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்கென்று தனியாக இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த தளங்களில் அந்தந்த நட்சத்திரங்களைப் பற்றிய அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. உங்கள் அபிமான நட்சத்திரங்களின் இணைய தள முகவரிகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள்

ரஜினிகாந்த் : http://www.rajinikanth.com
விஜயகாந்த் : http://www.indiadirect.com/captain
சரத்குமார்   : http://www.rskworld.com
அர்ஜூன்     : http://arjun.fanspace.com
பிரபு     : http://www.sivaji-prabhu.com
சூர்யா  : http://www.rssurya.com
விஜய் : http://www.actorvijayonline.com
விக்ரம் : http://www.chiyaanvikramonline.com
விஷால் : http://www.vishalblog.com/
அப்பாஸ் : http://www.actorabbas.com
மாதவன் : http://www.rmadhavan.com
ஜீவா : http://www.jeeva-online.com/
பிரசாந்த் : http://www.prashanthonthenet.com

நடிகைகள்

சிம்ரன்    : http://www.simplysimran.com
சினேகா    : http://www.priyamudansneha.com
அபிராமி    : http://www.abhiramionline.com
ஐஸ்வர்யா ராய்    : http://www.aishwarya-rai.com
கிரண்    : http://www.kiranontheweb.com
லைலா   : http://www.laila.net
மீனா   : http://www.meenaonthenet.com
ஜோதிகா    : http://www.jothikaonline.com
சங்கவி    : http://www.sangavi.com
சுவாதி    : http://www.swatheonline.com
ஷாலினி   : http://www.shalinionline.com
மும்தாஜ்   : http://www.mumtazonline.com
ரீமாசென்    : http://www.reemasen.com
அசின்    : http://www.asinonline.com
ஷெரீன்    : http://www.ilamaisherin.com
நமீதா    : http://www.namitha.info
மதுமிதா    : http://www.madhumitha.com
நிலா    : http://www.liveindia.com/meera
பூஜா    : http://www.actresspooja.com/
காவ்யா மாதவன்    : http://actresskavya.blogspot.com/

thanks:- Dina malar.

Categories: News Tags: , , ,

சிம்பு பிளஸ் அஜீத் ரசிகர்களுக்கு ஒரு நற் செய்தி..!!

October6, 2009 Leave a comment

ajith-simbu

சிம்பு பிளஸ் அஜீத் ரசிகர்களுக்கு ஒரு நற் செய்தி. இந்த இரண்டு ஸ்டார்களும் இணைந்து அசல் படத்தில் ஒரு அட்டகாசமான பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனராம்.

சிம்பு சமீப காலமாக தீவிர அஜீத் ரசிகராகி விட்டார். தனது படம் ஒன்றில் அஜீத் ரசிகராகவே அவர் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அஜீத்துடன் இணைந்து ஒரு படத்தில் தலை காட்டுகிறார்.

சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வரும் படம் அசல். அஜீத் நாயகன். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு அஜீத்துடன் இணைந்து ஆடுகிறாராம் சிம்பு. படத்தின் ஹைலைட்டாக இந்தப் பாடல் இருக்குமாம்.

ஏற்கனவே சில ஹீரோக்களுக்காக பாடல்கள் பாடியுள்ளார் சிம்பு. ஆனால் தற்போதுதான் இன்னொரு முன்னணி ஹீரோவுடன் இணைந்து திரையில் தோன்றுகிறார்.

அதேபோல தனது நண்பரான எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் இயக்கி வரும் புலி படத்தில், சூர்யாவின் கோரிக்கைக்கேற்ப ஒரு பாடலுக்கு ஆடியுள்ளாராம் சிம்பு. படத்தின் நாயகன் பவன் கல்யாணுடன் இணைந்து இந்த பாடலில் ஆடுகிறாராம் சிம்பு.

இந்த புலி படத்திற்கு இன்னொரு பின்னணிக் கதை உள்ளது. முதலில் இதை தமிழில் விஜய்யை வைத்துத்தான் இயக்குவதாக இருந்தார் சூர்யா. விஜய்யும் சம்மதித்து எல்லாம் ரெடியான நிலையில் திடீரென நடிக்க மறுத்து விட்டார் விஜய்.

என்ன காரணம் என்று அப்போது கூறப்பட்டது என்றால் – புலி கதையில் சிம்பு வின் ஆலோசனையின் பேரில் பல மாற்றங்களை செய்தி ருந்தார் எஸ்.ஜே.சூர்யா . இதனால் அப்செட் ஆன விஜய் புலிக்கு கும்பிடு போட்டு விட்டாராம்.

Invitation to join RupeeMail!

September15, 2009 Leave a comment

Hi ,

I have something interesting for you, RupeeMail!

It’s really amazing! You get paid to open & read the contents of RupeeMail. You receive promotional offers & special discounts in RupeeMail.

Interestingly RupeeMails will reach you based on the preference list you opted for.

Create your RupeeMail Account & refer your friends to earn launch referral bonus on every new registration.

Try this… http://www.rupeemail.in/rupeemail/invite.do?in=MzgzOTAlIyU5TDdQdVlXb3JIVnB0ZnhoNkdSRmtsMk9i

RupeeMail, It pays

Categories: News

தேசிய விருது: சிறந்த தமிழ் படம் `பெரியார்’

September8, 2009 Leave a comment

periyar-131

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் சார்பில் 2007ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதி்ல் `காஞ்சிவரம்’ படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், அதில் நடித்த பிரகாஷ் ராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.

சிறந்த தமிழ் படம் `பெரியார்’:

பிராந்திய மொழி படங்களில், தமிழில் சிறந்த படத்துக்கான விருது சத்யராஜ் நடித்த `பெரியார்’ படத்துக்கு கிடைத்துள்ளது.

லிபர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞானராஜசேகரன் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய `மோகமுள்’ படத்திற்கும் ஏற்கனவே விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் `1971′, மலையாளத்தில் `ஒரே கடல்’, மராத்தியில் `நிரோப்’, வங்க மொழியில் `பாலிகஞ்ச் கோர்ட்’ ஆகிய படங்களுக்கும் சிறந்த பிராந்திய மொழி படங்களுக்கான விருது கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் `தி லாஸ்ட் லியர்’ படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

நன்றி:- தட்ஸ் தமிழ்

Categories: News
Follow

Get every new post delivered to your Inbox.