Archive

Archive for March, 2008

விஜயகாந்தின் ‘அரசாங்கம்’……!!!!!!!!


தமிழ் திரையுலகில் ரஜினி, கமலின் 100வது படங்களான ‘ஸ்ரீராகவேந்திரர்’ மற்றும் ‘ராஜபார்வை’ ஆகியவை பரபரப்பாக பேசப்பட்டாலும் வணிக ரீதியாக ஏமாற்றம் அளித்தவை.

ஆனால், விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் சூப்பர் ஹிட். தற்போது விஜயகாந்த் நடித்துகொண்டிருக்கும் ‘அரசாங்கம்’ அவரது 150வது படம். இதையும் வெற்றிப்படமாக்கிவிட வேண்டும் என்று ரொம்பவே மெனக்கிடுகிறார் விஜயகாந்த்.

இதற்காக வெளிநாடுகளுக்கு சென்று சில சர்வதேச குற்றவாளிகளை பிடித்ததோடு, சில பாடல் காட்சிகளையும் படம்பிடித்து வைத்திருக்கிறார்.

ஆனாலும், ஏப்ரலில் ரிலீசாகும் ‘அரசாங்கம்’ விஜயகாந்துக்கு வெற்றியை தேடிதருமா அல்லது அவரை ஏப்ரல் ஃபூல் ஆக்குமா என்பது அடுத்தமாதம் தான் தெரிய ரும்.

Categories: Uncategorized

கர்ப்பிணி பெண்களுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு தேவை!!!!

ர்ப்பிணி பெண்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் திருச்சி கிளை சார்பில் ‘பார்ட்னர்ஷிப்’ என்ற தலைப்பில் கர்ப்பிணி பெண்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் மோகன்தாஸ் கூறியதாவது:

கர்ப்பிணிப் பெண்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்புதான் மிகப்பெரிய பலம். குறிப்பாக கணவர் மற்றும் அவரது தங்கைகளின் ஒததுழைப்பு முக்கிய தேவை. இது, கர்ப்பிணி பெண்களை உடல் மற்றும் மன ரீதியாக பலப்படுத்தும்.

கர்ப்பணி பெண்கள் முதல் மாதத்திலிருந்தே முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்துக்கொள்வது அவசியம். இதன் மூலம் பிரசவக் காலத்தில் குழந்தைகள் இறப்பு மற்றும் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பு போன்றவற்றை தவிர்க்கலாம்.

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பாதுகாப்பான குடும்பக்கட்டுபாடு போன்றவை குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Categories: Uncategorized

கவிதை — பயம்

கவிதை எழுத பயம்
உன் பெயரை விடவா? என்று

Image

Fear

ஓவியம் தீட்ட பயம்
உன் முகத்தை விடவா? என்று…..

மேலும் படிக்க….

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=782&Itemid=164

Categories: Uncategorized

ஐபிஎல் கிரிக்கெட்: இன்று 2 வது நாள் ஏலம்………!!!!!!!!!

இந்தியன் பிரிமியர் லீக்கின் இருபதுக்கு 20 போட்டிகளுக்காக, இன்று இரண்டாவது நாளாக கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.

இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் அடுத்தமாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 44 நாட்களில் 59 ஆட்டங்கள் இடம் பெறவுள்ளது.

இதில், பங்கேற்கும் அணிகள் 8 மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கேற்கும் முன்னணி கிரிக்கெட் வீரர்களை பிரபல கோடீஸ்வரர்கள் ஏற்கனவே ஏலத்தில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஏலம் இன்று நடைபெறுகிறது.முதல் நாள் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் இன்றைய ஏலத்தில் பங்கேற்கின்றனர். 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுடன் இன்றைய ஏலம் தொடங்குகிறது.

இன்றைய ஏலத்தில் பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக், சல்மான் பட், மொஹமத் யூசுப், யாசிர் ஹமீத், சொஹைல் தன்வீர் மற்றும் நியூசிலாந்தின் கைல் மில்ஸ், ஜீதன் படேல், பிராண்க்ளின், மார்டின், டெய்லர், புல்டன், ஜேமி ஹவ் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ், ஷேன் வாட்சன், ஜேம்ஸ் ஹோப்ஸ், பில் ஜாக், ப்ரெட் க்ரீவ்ஸ், லூக் போமர்பாஷ் ஆகிய வீரர்களும் இன்றைய ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

Categories: Uncategorized

தமிழர்களை அழிக்க துணை : இந்தியாவுக்கு புலிகள் கண்டனம்….!!!!!


டெல்லி வந்த இலங்கை ராணுவ தளபதிக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டதற்காக இந்தியாவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் அளித்துள்ள அறிக்கை ஒன்றில், டெல்லி வந்த இலங்கை ராணுவ தளபதிக்கு ராணுவ மரியாதை அளித்ததன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை இந்தியா மிகவும் புண்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து ஒருதலைப் பட்சமாக விலகி, தமிழர்கள் மீது பயங்கரமான வன்முறைத் தாக்குதலை நடத்தி வரும் இலங்கையின் ராணுவ தளபதிக்கு ராணுவ மரியாதை அளித்த இந்தியாவின் செயல் கண்டனத்துக்குரியது என அந்த அறிக்கையில் அந்த இயக்கம் கூறியுள்ளது.

இலங்கை அரசின் ராணுவ வழித் தீர்வுக்கு ஒருபுறமும், கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்களுக்கு மறுபுறமுமாக, உலகளாவிய ரீதியில் சிங்கள அரசு கண்டனங்களுக்கும் எச்சரிக்கைகளுக்கும் அதிகளவில் உள்ளாகி வருகின்றது.

ஆயினும் இக்கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் புறம் தள்ளிவிட்டு அதிகளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இன ரீதியான கைதுகள் என்பனவற்றை சிங்களப்படைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்த உண்மையை மூடிமறைப்பதில் அக்கறை காட்டும் சிங்கள அரசு, தொடரும்போரிற்கான பழியைத் தமிழரின் சுதந்திர இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது சுமத்தி தனது இன அழிப்புப் போருக்கு உலகின் உதவியைக் கோரி நிற்கின்றது.

சிங்கள அரசின் இந்த கபட நோக்கத்தைப் பல ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொண்டு தமிழின அழிப்பிற்குத் துணை போகக்கூடிய உதவிகளை நிறுத்தியுள்ளன.

இந்த உண்மை இந்திய அரசிற்கும் நன்கு தெரியும். ஆயினும் தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வே காணவேண்டும் எனக் கூறிக்கொண்டு, அதற்கு மாறாக ராணுவ ரீதியாக இலங்கை அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் செயற்பாடுகள் தமிழின அழிப்பிற்கே வழிகோலும்.

இந்திய அரசின் இந்த வரலாற்றுத் தவறானது, ஈழத் தமிழர்களைத் தொடர்ந்து இன்னல்களுக்குள்ளாக்கி, ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய இன அழிவு அபாயத்துக்குள் அவர்களைத் தள்ளிவிடும்.

இந்திய அரசு புரியும் இந்த தமிழின விரோதச் செயலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு அதற்கு தமது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என ஈழத் தமிழ் மக்கள் சார்பில் புலிகள் இயக்கம் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories: Uncategorized

கால் சென்டர் ஊழியராக த்ரிஷா…!!!!!!!!!!!!

கால் சென்டர்களில் நடக்கும் காதல் மற்றும் க்ரைம் கதைகளை தொகுத்தாலே பல சினிமாக்கள் உருவாகிவிடும். இயக்குனர் கவுதம் அப்படி உருவாக்கியதுதான் ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’.

‘வாரணம் ஆயிரம்’ படத்துக்கு பின்னர் கவுதம் இயக்கும் இந்த புதிய படம், முழுக்க முழுக்க கால் சென்டரை மையமாக கொண்ட க்ரைம் த்ரில்லர். இதில், கால் சென்டரில் வேலை பார்க்கும் பெண்ணாக நடிப்பவர் த்ரிஷா.

இதே கேரக்டரில்தான் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா. இதற்காக தனது கால் சென்டர் தோழி ஒருவரிடம் ஸ்ரேயா பயிற்சி எடுத்து வருகிறாராம்.

ஆனால், த்ரிஷா யாரிடமும் பயிற்சி எடுக்கவில்லை. ஒருவேளை தனது தோழியான ஸ்ரேயாவிடமே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம் என நினைத்துவிட்டாரோ என்னவோ…?

Categories: Uncategorized

ஐசிசி தரவரிசையில் முதலிடம்; பான்டிங்கை முந்தினார் சச்சின்

ஒருதினப் போட்டிகளுக்கான எல்ஜி-ஐசிசி தரவரிசைப் பட்டியலில், ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங்கை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்தார் இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர். முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரின் இரண்டு இறுதி ஆட்டங்களில் சிறப்பாக பேட் செய்ததன் பலனாக, சச்சின் 777 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு முன்னேறினார். இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ரிக்கி பான்டிங், சச்சினைக் காட்டிலும் 7 புள்ளிகள் குறைவுடன் உள்ளார். இவர்களைத் தொடர்ந்து, முன்றாம் இடத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிராம் ஸ்மித் இருக்கிறார்.முத்தரப்புத் தொடரில் 300 ரன்களுக்கு மேல் குவித்ததுடன், 20 பேரை ஆட்டமிழக்கச் செய்த தோனி, 10-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். யுவராஜ் சிங் 18-ம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் வென்றதன் பலனாக, ஒருதின போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 3 புள்ளிகள் கூடுதலாகப் பெற்ற இந்திய அணி 113 புள்ளிகளுடன் 4-வது இடத்தை வகிக்கிறது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் 2-வது மற்றும் 3-வது இடத்திலும் உள்ளன.
Categories: Uncategorized